Posts Tagged ‘Tamil Writers Tamil Books Asokamithran’

Chennai Book Exhibition

January 6, 2010

எப்பொழுதம் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை வாங்கி வந்தேன். வாங்கி வந்த கையோடு அசோகமித்ரனின் நினைவோடை படித்து முடித்தேன். சில சம்பவங்கள், சிலரை பற்றி ஆசிரியரின் பார்வை, “response TO certain reactions ” , சில புத்தக விமர்சனம் . அருமையாக இருந்தது. அசோகமித்ரனின் கதைகளும் கட்டுரைகளும் ஒன்று போலவே பெரும்பாலும் இருக்கும். இரண்டிலும் மிகை தள்ளப்பட்டு பிரம்மா சூத்திரமாய் ( எதற்கு வம்பு ) , திருக்குறளாய்.
நினைவோடை முடித்தவுடன் இதற்கு நேர் மாறாய் லா சா ரா வின் “கல் சிரித்தது” படித்து முடித்தேன். பிராயச்சித்தமும் வாங்கி வந்தேன். எத்தனை வார்த்தை ஜாலம் அல்லது மொழி ஜாலம். தமிழ் மொழி மட்டும் கற்று, இந்த மண்ணில் வாழாதவர்களால் லா சா ரா வை ரசிக்க முடியும்மா? கதையா, கட்டுரையா, கவிதையா, நாடகம்மா என்று பிரிக்க முடியாத எழுத்து லா சா ரா வுடையது. இந்த கதையின் அர்த்தம் என்ன ? Is it just depicting shades of humans or viccistudes of life ? கோமதியும், தர்மராஜனும், மணியும் மனதய் விட்டு அகலவில்லை. பிறர்க்காக தான் தவறு செய்ய துணிவதும் அனால் தவறு செய்த ( Should I SAY this ) மனைவியையும் , மகனையும் பிரிவதும் என்ன லாஜிக்?

Advertisements